Home

தாது மணல்,ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.
உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாது மணல்-லில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.
தாது மணல்-லில் எஞ்சியுள்ள தாதுக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது.
கடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் தாது மணல்-லில் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து  நிகழ்வதால் கடற்கரை தாது மணல்-லில் கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓடிவரும் தாமிரபரணி ஆறுகடலில் கலக்கும் பகுதியில் தாது மணல்-லில் வளங்கள் அதிகம் உள்ளன.
தாது மணல் கனிம வளங்களின் அளவு: புவியியல் ஆய்வுத் துறையினர் (ஜி.எஸ்.அய்) ஆய்வின்படி (இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வு) தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம் வரை இக்கனிமங்கள் உள்ளன.
அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மோனசைட், தொழில்துறையில் பயன்படும் கார்னெட், சிலுமினேட், சிர்க்கான் போன்ற கனிமங்கள் இப்பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.